இந்தியா

நாட்டை கொள்ளையடிப்பவர்களை தூக்கி எறியுங்கள்: நரேந்திர மோடி

செய்திப்பிரிவு

நாட்டை கொள்ளை அடிப்பவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகரில் நரேந்திர மோடி பேசியதாவது: "மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை வெளிநாட்டில் பதுக்கியவர்களைக் கொண்ட அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நாட்டை கொள்ளையடித்தவர்களை தூக்கி எறியுங்கள்.

சோனியாவும் - ராகுலும் கஷ்டங்களை உணர்ந்தது இல்லை. சாமன்ய மக்களின் வேதனை அவர்களுக்குப் புரியாது. ஏனென்றால் சோனியாவும், ராகுலும் பிறக்கும் போதே பணக்காரர்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை திரும்பிக் கொண்டுவர வேண்டும் என்றால் நாட்டை கொள்ளையடிப்பவர்களை தூக்கி எறியுங்கள்.

நடைபெறும் தேர்தல் ஒருபுறம் தேநீர்காரருக்கும் மறுபுறம் தாய் - மகன் கூட்டணிக்கும் இடையே நடக்கும் போட்டி.

காங்கிரஸ் கட்சியினருக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள். நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இந்த தேசத்தை பாதுகாக்கும் காவலருக்கு, தேசத் தொண்டனுக்கு 60 மாதங்களாவது கொடுங்கள். தேசத்தின் மீது வேறு யாரும் கை வைக்காமல் பார்த்துக் கொள்வேன்" இவ்வாறு மோடி பேசினார்.

SCROLL FOR NEXT