மோடி பதவியேற்பு விழாவில் பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், தர்மேந்திரா, அனுபம் கெர், ஹேமா மாலினி, சத்ருகன் சின்ஹா, கிர்ரோன் கெர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் விவேக் ஓபராய், மதுபந்தர்கர், பப்பி லஹிரி, பூணம் தில்லான், வினோத் கன்னா, போஜ்புரி பாடகர் மணீஷ் திவாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பங்கேற்காதவர்கள்
அமிதாப்பச்சன் படப்பிடிப்பு இருப்பதால் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் மற்றும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்(84) ஆகியோரும் பங்கேற்கவில்லை. வயது மூப்பின் காரணமாக பயணிப்பது சிரமம் என்பதால் விழாவில் பங்கேற்கவில்லை. இருப்பினும், அவர் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.