இந்தியா

நன்னடத்தை கைதிகளுக்கு இயற்கை சாகுபடி பயிற்சி

பிடிஐ

டெல்லி திஹார் சிறையில் நன்னடத்தை கொண்ட கைதிகள், இயற்கை சாகுபடியில் காய்கறிகள், பழங்களை விளைவிக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இங்குள்ள ஆயுள் தண்டனை கைதிகளில், 12 ஆண்டுகால சிறை வாசத்துக்குப் பிறகு, சுமார் 35 பேர் நன்னடத்தை கொண்டவர்களாக சிறை கமிட்டியால் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் வேளாண் நிபுணர் களின் வழிகாட்டுதலுடன் இங் குள்ள பசுமை குடிலில் இயற்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சிறை டிஐஜியும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான முகேஷ் பிரசாத் கூறும்போது, “நன்னடத்தை கொண்ட கைதிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறை வளாகத்தில் காலியாக இருந்த சுமார் 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை சாகுபடி செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து பசுமை குடில் அமைத்து இவர்கள் மூலம் இங்கு காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்து வருகிறோம். இங்கு வேலை செய்யும் கைதிகளுக்கு கூலி தரப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை திஹார் கைதிகளின் நலனுக்காக செலவிடுகிறோம்.

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப் பதே இதன் நோக்கம். விடுதலை பெற்ற பின் சிறந்த வாழ்க்கையை இவர்கள் அமைத்துக்கொள்ள இப் பயிற்சி உதவும்” என்றார்.

SCROLL FOR NEXT