நாட்டிலேயே முதன்முறையாக, காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய புகார்களை பதிவு செய்யவும், அவர்களைக் கண்டு பிடிக்க உதவவும் வசதியாக புதிய இணையதளத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக சுமார் 11 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இந்நிலை யில், www.khoyapaya.gov.in என்ற இணையதளத்தை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது. இதுபோன்ற இணைய தளம் தொடங்கப்படுவது நாட்டி லேயே இதுதான் முதல் முறை.
இந்த இணையதளத்தில் காணாமல் போகும் குழந்தைகள் பற்றி புகார் செய்வதுடன், அவர் களது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களே நேரடியாக பதிவேற்றம் செய்ய லாம். காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல் தெரிந்தால் அதுபற்றியும் இதில் தெரிவிக்கலாம்.
காணாமல் போன குழந்தைகளை மீட்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட அனைத்து தகவ லையும் இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மின் னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கூட்டு முயற்சி யில் தொடங்கப்படும் இந்த இணையதளத்தில் 3 பிரிவுகள் இருக்கும். ‘எனது குழந்தை காண வில்லை’, ‘ஒரு குழந்தையைக் கண்டுள்ளேன்’, ‘காணாமல் போன குழந்தையை தேடுதல்’ என அந்த பிரிவுகள் இருக்கும்.
மேலும் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்தால், கடத்தப்பட்டதாகக் கருதி வழக்கு பதிவு செய்யும்படி போலீஸுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தர வுகளும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும்.
காணாமல் போகும் குழந்தை களை கண்டுபிடிப்பதில் போலீ ஸாருக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது.
எனவே இதுவிஷயத்தில் போலீஸாரின் உதவியைப் பெற இந்த இணையதளம் பொது மக்களுக்கு பெரிதும் உதவும் என்று குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் மட்டும் சராசரியாக தினமும் 18 குழந்தைகள் காணாமல் போவ தாகவும் இதில் 4 பேரைக் கண்டு பிடிக்க முடியாமலே போய்விடுவ தாகவும் மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சமீபத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. காணாமல் போகும் குழந்தைகளை மீட்க சம்பந்தப் பட்டவர்கள் போதுமான அளவில் உதவுவதில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.