இந்தியா

மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்தது கோவா அரசு

பிடிஐ

தமிழகம், டெல்லி, உத்தராகண்ட், குஜராத், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் நெஸ்லேயின் சர்ச்சைக்குரிய மேகி விற்பனையை தடை செய்ததைத் தொடர்ந்து கோவா மாநிலமும் மேகிக்கு தடை விதித்துள்ளது.

உணவுப்பாதுகாப்புச் சோதனையில் மேகி-யில் அளவுக்கதிமாக ரசாயனங்கள் கலந்திருப்பதன் காரணமாக டெல்லி, குஜராத், காஷ்மீர், உத்தராகண்ட், தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் மேகி விற்பனையைத் தடை செய்தது.

இந்நிலையில் கோவாவிலும் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்படுவதாக கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "மேகி நூடுல்ஸ் குறித்து பல்வேறு மாநிலங்களில் இருந்துவரும் பரிசோதனை அறிக்கைகள் மேகிக்கு எதிராகவே இருக்கின்றன. இந்நிலையில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு திங்கள் கிழமை முதல் மாநிலத்தில் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT