ஆம்வே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வில்லியம் எஸ் பின்க்னியை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநில போலீஸார் குர்காவ்னில் உள்ள அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலையில் அவரைக் கைது செய்து செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கர்னூல் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
நிதி முறைகேடு குற்றத்துக்காக வில்லியம் கைது செய்யப்பட்டதாக கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரகுராம் ரெட்டி தெரிவித்தார்.
பரிசு சீட்டு மற்றும் நிதி சுழற்சி திட்டங்கள் ஆகியவற்றை செயல் படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதாக ரெட்டி கூறினார். இவை தடை செய்யப்பட்டவை யாகும். இது தவிர மோசடி உள் ளிட்ட பல பிரிவுகளின் கீழும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆம்வே நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கேரள மாநில போலீஸார் வில்லியம் மற்றும் இரண்டு நிறுவன இயக்குநர் களைக் கைது செய்தனர். அப்போதும் நிதி மோசடி குற்றச் சாட்டுதான் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
வில்லியமை ஜாமீனில் விடு விக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அது நிரா கரிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதன் கிழமை நடைபெறும்.
கைது செய்யப்பட்ட வில்லியம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆம்வே நிறுவனம் விளக்கம்
ஆம்வே நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அந் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: “ 2013-ம் ஆண்டு பதிவு செய்யப் பட்ட ஒரு வழக்கில் நிறுவனத்தின் தலைவர் வில்லியம்ஸ் ஸ்காட்பிங்னி கைது செய்யப் பட்டுள்ளார். இது குறித்து எங்கள் நிறுவனத்துக்கு எந்த முன் தகவலும் கொடுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றது. எங்கள் தொழில் குறித்து இது தவ றான கருத்தை ஏற்படுத்தி விடும். சட்டத்தை மதிக்கும் ஆம்வே நிறு வனம் காவல் துறை விசாரணை களில் முழு ஒத்துழைப்பை கொடுத் திருக்கிறது. நேரடி விற்பனை தொழில் துறைக்காக சட்ட ரீதியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் வழக்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏலச்சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் சட்டம் 1978 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசு மற்றும் அதிகார அமைப்புகளை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
ஆம்வே 1998-ம் ஆண்டு முதல் 140-க்கும் அதிகமான தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து, சட்டப்படி இயங்கி வரும் நிறுவனம். மத்திய, மாநில சட்டங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.