நெஸ்லே நிறுவனம் விற்பனை செய்துவரும் மேகி நூடுல்ஸ் உணவு வகை பொருட்கள் அனைத்தையும் திரும்பப் பெறும்படி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணை யம் (எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று உத்தரவு பிறப்பித்தது.
மேகி நூடுல்ஸ் உண்பதற்கு பாதுகாப்பற்றவை என்றும் உடல் நலனுக்கு தீங்கு தரக்கூடியது என்றும் எப்எஸ்எஸ்ஏஐ தெரிவித் துள்ளது.
ஒப்புதல் பெறாமலேயே மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ்களை யும் நெஸ்லே விற்பனை செய்து வருகிறது. இந்த உணவுப்பொருள் பாதுகாப் பானதா என்பதையும் மதிப்பிட வில்லை.
எனவே இவற்றையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தர ஆணை யம் அரிவித்துள்ளது.
மேகி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வகையைச் சேர்ந்த ஒப்புதல் பெறப்பட்டு விற்பனையில் உள்ள 9 வகை நூடுல்ஸ்களும் உண்பதற்கு தகுதியற்றவை, தீ்ங்குதரக்கூடியவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே இவற்றை தயாரிப்பதோ இறக்குமதி செய்வதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.
பொருள்களின் மணத்தை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் எம்எஸ்ஜி உப்புகள் விஷயத் திலும் நெஸ்லே நிறுவனம் கட்டுப்பாடுகளை மீறியுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தி அது தொடர்பாக 3 நாள்களுக் குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நெஸ்லே நிறு வனத்துக்கு தர ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் 9 நூடுல்ஸ் வகை உணவுப் பொருட்கள் களின் விற்பனைக்கு அளித் துள்ள அனுமதியை ஏன் வாபஸ் பெறக்கூடாது என்பதற்கு 15 நாள்களுக்குள் விளக்கம் தரு மாறும் அதன் தயாரிப்பு நிறு வனங்களுக்கு தர ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பான உத்தரவை எப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் தலைமை செயல் அலுவலர் ஒய்.எஸ் மாலி பிறப்பித்துள் ளார்.
நூடுல்ஸ்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பது சோதனைக்கூட ஆய்வில் தெரிய வந்ததால் டெல்லி, குஜராத், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதித்துள் ளன.
மேகி ஓட்ஸ் மசாலா நூடுல் ஸுக்கு ஒப்புதல் கேட்டு கடந்த ஜூலை மாதம் மனு செய்த நிலையில் சில விளக்கங்களை தர ஆணையம் கேட்டது. ஆனால் ஒப்புதல் தொடர் பான நடைமுறைகள் முடிவதற் குள்ளாக மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ் விற்பனைக்கு வந்துள் ளது.
இந்த செயல்பாடு சட்டவிதி களை அப்பட்டமாக மீறுவதா கும். எனவே இந்த பொருளை வாபஸ் பெற வேண்டும் என் றும் உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதனிடையே, இந்தியா தடைவிதித்துள்ள மேகி நூடுல் ஸ்களை சந்தையிலிருந்து வாபஸ்பெறுவதாக நேற்று அறிவித்தது நெஸ்லே.
இந்த பொருள்களின் தரம்பற்றி குழப்பம் இருப்பதால் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தகர்ந்து விடும். எனவே குழப்பம் தீரும் வரை இந்திய சந்தை யிலிருந்து வாபஸ் பெறுகிறோம். எனினும் மேகி நூடுல்ஸ்கள் உண்பதற்கு பாதுகாப்பானவை என்பதை நெஸ்லே உறுதிபடத் தெரிவிக்கிறது என்று அதன் சர்வதேச தலைமை செயல் அதிகாரி பால் பல்க் தெரிவித் தார்.
டெல்லி, தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பொருள்களுக்கு தடைவிதிக்கப்படவே நிலை மையே நேரில் மதிப்பிட நெஸ் லேவின் தலைமை அலுவல கம் அமைந்துள்ள ஸ்விட்சர் லாந்திலிருந்து பால் இந்தியா வுக்கு வந்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:
ஆதாரமில்லாத காரணங் களால் மேகி நூடுல்ஸ்களின் தரத்தின் மீது குழப்பம் ஏற்பட் டுள்ளது. இதனால் நுகர்வோர் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந் துள்ளது.
மேகி நூடுல்ஸ் தயாரிப்புக் கான தரத்தில் பிற நாடுகளில் என்ன கையாள்கிறோமோ அதே தர நடைமுறைகளையே இந்தியாவிலும் பின்பற்று கிறோம். நாங்கள் நடத்திய சோதனையில் மேகி பொருள்கள் உண்பதற்கு பாதுகாப்பானவை, கேடுவிளைவிக்காதவை என்பதை உறுதி செய் கின்றன.
ஆய்வு நடைமுறைகளை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டு தேவையான ஒத்துழைப்பை நெஸ்லே வழங்கி வருகிறது. மீண்டும் மேகி நூடுல்ஸ்களை இந்திய சந்தைகளில் விரைவாக கொண்டுவருவோம்.
நுகர்வோர் நம்பிக்கையை பெறுவதுதான் எங்களின் முக்கிய நோக்கம் என்றார்.