இந்தியா

பின்லேடன் கொல்லப்பட்டபோது அமெரிக்காவை கண்டிக்காத பாகிஸ்தான்: இந்தியாவுக்கு எதிராக ஆரவாரம் செய்வது ஏன்? - சிவசேனா கேள்வி

பிடிஐ

ஒசாமா பின்லேடனை பாகிஸ்தா னில் புகுந்து அமெரிக்கா கொன்ற போது மவுனம் காத்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவுக்கு எதிராக ஆரவாரம் செய்வது ஏன், என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மியான்மர் எல்லைக்குள் பதுங்கி யிருந்து இந்தியாவில் தாக்குதல் நடத்திவந்த தீவிரவாதிகளை இந்திய ராணுவம் அண்மையில் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்கிக் கொன்றது. இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், “இது மற்ற நாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள செய்தி” என்றார்.

இதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் கூறும் போது, “மியான்மரை போலல்ல பாகிஸ்தான். பாகிஸ்தானுக்குள் அதுபோன்ற துணிகர முயற்சி மேற் கொள்ளப்படுமானால், அதற்கு இணையான பதிலடி தரும் வல்லமை எங்கள் பாதுகாப்பு படை யினருக்கு உள்ளது. இதை எங் களுக்கு எதிராக தீயநோக்கம் கொண்டவர்கள் உணரவேண்டும்” என்றார்.

இந்நிலையில் சிவசேனாவின் ‘சாம்னா’ நாளேட்டில் நேற்று வெளி யான தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது:

ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக் குள் புகுந்து கொன்றன. அவரது உடலையும் எடுத்துச் சென்றன. அப்போது அமெரிக் காவை எதிர்த்து ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை பாகிஸ் தான் முதலில் உலகுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் மியான்மர் நடவடிக்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, இந்தியாவை மிரட்டும் வகையில் பாகிஸ்தான் பேசுகிறது. இது போன்ற கருத்துகளை கூறுவது அந்நாட்டுக்கு பொருத்தம் ஆகாது.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஆளில்லா விமானங் களைக் கொண்டு அமெரிக்கா நூற்றுக்கணக்கில் தாக்குதல் நடத்தி யுள்ளது. இதில் கொல்லப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 84 பேர் மட்டுமே தீவிரவாதிகள். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ஏன் அமைதியாக உள்ளது. இதில் அமைதியாக இருக்கும் பாகிஸ்தான் இப்போது இந்தியாவுக்கு எதிராக ஆரவாரம் செய்வது ஏன்?

பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளால் ஆயிரக்கணக் கான இந்தியர்கள் கொல்லப்பட் டுள்ளனர். இந்நிலையில் இந்தியா வுக்கு எதிரான பயங்கரவாதத்தை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதே மியான்மர் நடவடிக்கை சொல்லும் பாடம் ஆகும். இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT