இந்தியா

தேசிய ஜவுளி கழக நில ஊழல் புகார்: வகேலா உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்கு

பிடிஐ

மத்திய அரசின் தேசிய ஜவுளி கழக (என்டிசி) நில ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மும்பையின் முக்கிய பகுதியான பரேலில் என்டிசிக்கு சொந்தமான நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு மலிவான விலைக்கு விற்றதாக எழுந்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நில விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, வகேலா, என்டிசி முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராமச்சந்திரன் பிள்ளை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கு பதிவு செய்யப்பட்ட உடன் வகேலா உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான வீடு உட்பட புதுடெல்லி, காந்திநகர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறுவதால் இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க சிபிஐ வட்டாரம் மறுத்துவிட்டது.

என்டிசி நில விற்பனை ஊழல் தொடர்பாக கடந்த ஓராண்டு கால மாக முதல்நிலை விசாரணை நடத்திய பிறகு இப்போதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக சிபிஐ தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வகேலா, குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். குஜராத் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT