பிஹாரில் கடத்தல் வழக்கு ஒன்றில் ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) எம்எல்ஏ ஆனந்த் சிங்கை 14 நாட்களில் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாட்னா புறநகர் பகுதியில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்தில் ஆனந்த் சிங்குக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை விசாரித்த பெருநகர நீதிமன்ற நீதிபதி, 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் சில இடங்களில் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.