வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக் குழுவை புதிய மத்திய அரசு அமைத் திருப்பதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதே நேரம் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டம் 370வது பிரிவு குறித்து அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், “கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைக் குழு வின் விசாரணை வரம்பில், இந்தியாவில் கறுப்புப் பணம் உருவாவதற்கான காரணங் கள், அதை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களில் இருந்து அவற்றை மீட்டு வரும் வழிகள் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இக்குழுவுக்கு காலவரையறை நிர்ணயிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “காஷ்மீர் விவகாரம் மிகவும் நுட்பமானது என்பதால் அதில் சிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் சட்டத்தில் கைவைக்கக் கூடாது. அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் களுக்கு இருந்த பொறுப்புகளை மதிக்கும் வகையில், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் இந்தப் பிரச்சினையை கையாள வேண்டும்” என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.