இந்தியா

அரசு விடுதியில் இருந்து 13 மாணவிகள் தப்பி ஓட்டம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் உள்ள அரசு விடுதியில் இருந்து நேற்று 13 மாணவிகள் ஜன்னல் வழியாக தப்பி விட்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள யூசப்கூடா பகுதியில் அரசு மகளிர் விடுதி உள்ளது. இங்கு, ஆதரவற்ற பெண்கள் உட்பட சிலருக்கு தையல், கணினி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று இந்த விடுதி வளாகத்தில் தெலங்கானா மாநிலம் உதயமாகி ஓராண்டிற்கான நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதி மாணவிகள் பங்கேற்றனர். அதன்பின்னர் அனைவரும் அவரவர் அறைகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் விடுதி காப்பாளர் ராஜேஸ்வரி சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு ஜன்னல் ஒன்று கழற்றி கீழே வைக் கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விடுதி மாணவிகளை அழைத்து விசாரித்த தில், 13 மாணவிகள் தப்பி வெளியேறியது தெரிய வந்தது.

இது குறித்து யூசப்கூடா போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தப்பி ஓடியவர்களில் 5 பேர் ஆதரவற்ற பெண்கள் என தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT