இந்தியா

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர் சூரியஒளி மின்சாரம் தயா ரிக்க தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்தி தருவ தாகக் கூறி பலரிடம் மோசடி செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் பாபுராஜ் தொடர்ந்த வழக்கில், சரிதா நாயர் தன்னிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை பத்தனம் திட்டா நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் ஆர்.ஜெயகிருஷ் ணன் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ண னுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் சரிதாவுக்கு ரூ. 45 லட்சமும் பிஜு ராதாகிருஷ்ணனுக்கு ரூ. 75 லட்சமும் நீதிபதி அபராதம் விதித்தார்.

அப்போது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜ ராகி இருந்தனர். மனைவியை கொலை செய்த வழக்கு தொடர் பாக கடந்த ஓராண்டாகவே பிஜு சிறையில் உள்ளார். சரிதா ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

SCROLL FOR NEXT