இந்தியா

ஆந்திராவில் இடி தாக்கி 9 பேர் பலி: கோடிக்கணக்கில் பயிர்கள் சேதம்

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக இடி தாக்கியதில் இதுவரை தம்பதி உட்பட 8பேர் பலியாகி உள்ளனர். பயிர்கள் சேதமடைந்ததில் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த அளவு காற்றழுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கம்மம் மாவட்டத்தில் அறுவடை செய்த நெற்பயிர்கள், பருத்தி, சோளம், மிளகாய் போன்றவை முழுவதுமாக நனைந்தன. இதனால் சுமார் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மஹபூப் நகர் மாவட்டத்தில் 7,000 ஹெக்டார் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளது. 4,000 ஏக்கர் பரப்பளவில் மாங்காய்கள் உதிர்ந்தன. வாரங்கலில், 25,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. 11,000 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளது.

பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. நலகொண்டா மாவட்டத்திலும் பல ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளது. ஆதிலாபாத் மாவட்டத்தில் இதுவரை, 3,000 ஹெக்டேர் நெற்பயிர்களும், 5,000 குவிண்டால் காய்கறி, மா, வாழை, மிளகாய், போன்றவை சேதமடைந்துள்ளது.

ஆந்திர அரசு அறிவித்துள்ள ஓர் அறிக்கையில் தொடர்மழை காரணமாக, இதுவரை, 9,988 ஹெக்டேர் பயிர்கள் சேத மடைந்துள்ளதாகவும், 35,910 ஹெக்டேர் பரப்பளவில், மா, பப்பாளி, வாழை, முந்தரி, திராட்சை, மற்றும் காய்கறிகள் நாசம் அடைந்துள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. மஹபூப்

நகரில் 8 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்கு இதுவரை ஸ்ரீகாளத்தில் தம்பதி உட்பட 9 பேர் மரண மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் நரசிம்மன், மாநில தலைமை செயலாளர் மெஹந்தி மற்றும் உயர் அதிகாரி களுடன் சனிக்கிழமை மாலை, மழை நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

மழை பெய்யும் மாவட்டங்களில், ஆட்சியர்கள் உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, நஷ்டம் குறித்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT