இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.5 கோடியை தாண்டியது.
கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1 கோடியே 30 லட்சம் பேர் புதிதாக பேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதன் மூலம் சர்வதேச அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
செல்போனில் 2ஜி இணையதள சேவையிலும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்தும் பேஸ்புக் லைட் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்.
இந்தியாவில் செல்போன் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3ஜி சேவை பல இடங்களில் கிடைத்தாலும், 80 சதவீத செல்போன் வாடிக்கையாளர்கள் 2ஜி சேவையையே பயன்படுத்தி வருகின்றனர்.