இந்தியா

17 வயது சிறுவனுடன் கூடா நட்பு கணவனைக் கொன்ற பெண் கைது

செய்திப்பிரிவு

சிறுவனுடன் ஏற்பட்ட கூடா நட்பு காரணமாக, கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற 28 வயது இளம்பெண் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திரா (40). இந்திய விமானப் படையில் சார்ஜன் டாக உள்ளார். இவரது மனைவி சுதா சந்திரா (வயது 28). தெற்கு டெல்லியில் உள்ள சுப்ரதோ பூங்கா குடியிருப்பில் வசித்து வரும் இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், ரமேஷ் சந்திராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விட்டதாக சுதா சந்திரா கூறினார். அவசரமாக மருத் துவமனைக்கு கொண்டு சென்ற போது, ரமேஷ் சந்திரா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித் தனர். இறப்புச் சான்றும் வழங்கப் பட்டுவிட்டது. சில தினங்கள் கழித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபோது அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போலீஸார் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் உள்ள மற்றொரு அதிகாரியின் 17 வயது மகனுடன் சேர்ந்து ரமேஷ் சந்தி ராவை கழுத்தை நெரித்துக் கொன் றதை ஒப்புக் கொண்டார்.

அந்தச் சிறுவனுக்கும், சுதாவுக் கும் இடையே கூடா நட்பு இருந்து வந்துள்ளது. அதை ஒருநாள் ரமேஷ் சந்திரா பார்த்து விட்டார். அன்று முதல் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவ ரும் ரமேஷ் சந்திராவை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டனர். சுதாசந்திரா கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT