இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல்

ஐஏஎன்எஸ்

ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து இன்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதல் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா பகுதியில் இன்று அதிகாலை 3.10 மணியளவில் எல்லை பாதுகாப்புப் படை நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

தானியங்கி ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தினர். இந்திய தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு அருகே பறவைகள் சரணாலயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

SCROLL FOR NEXT