இந்தியா

மோடியை போல நான் உண்மையை மறைக்கவில்லை: திக்விஜய்சிங் பேச்சு

செய்திப்பிரிவு

சொந்த வாழ்க்கையில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், மோடியை போல தெளிவற்று உண்மையை மறைக்கவில்லை என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் கூறுகையில்," நான் எனது சொந்த வாழ்க்கையை மறைக்கவில்லை, மோடி தான் அவரது சொந்த வாழ்க்கையை 30 ஆண்டு காலமாக மறைத்து அரசியல் செய்துள்ளார்.

எனக்கு எதையும் சந்திக்கும் தைரியம் இருக்கிறது. நான் அம்ருதா ராயை, அவரது விவாகரத்திற்கு பின் திருமணம் செய்வேன்".

மேலும் அவர், "தற்போது நடக்கும் தேர்தல் சாதாரன மக்களுக்கும் பெரும் முதலாளிகளுக்குமான போட்டி. உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்த்த பெரு நிறுவனங்கள் தான் தற்போது மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றன" என்றார்.

முன்னதாக திக்விஜய் சிங்குக்கு , பெண் நிருபர் அமிர்தா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அமிர்தா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக் கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறினார்.

SCROLL FOR NEXT