டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் சார்பில் ‘மிரர்’ என்ற நாளிதழ் வெளியாகிறது. இதன் மும்பை பதிப்பில் நேற்று 39-வது பக்கத்தில் ‘மணமகன் தேவை’ விளம்பரம் வெளியாகி உள்ளது.
அதில் ‘தி இந்து’ நாளிதழ் வாசிக்கும் மணமகன் தேவை. ஏனென்றால், உண்மையான செய்திகளை மட்டுமே தாங்கி வருகிறது தி இந்து. அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி செய்திகள் சுருக்கமாக உள்ளன. விளம்பரமாக இருந்தால் கூட அதை கவனமாக பரிசீலித்த பிறகே பிரசுரம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
போட்டி பத்திரிகையை புகழ்ந்து விளம்பரம் கொடுக்கப்பட்டதை கூட கவனிக்காமல் ‘மிரர்’ நாளிதழ் இதை வெளியிட்டுள்ளது.