இந்தியா

தேசியவாத காங்கிரஸ் தலைவராக‌ சரத் பவார் மீண்டும் தேர்வு

ஐஏஎன்எஸ், பிடிஐ

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 6வது தேசிய செயற்குழு மாநாடு நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவராக சரத் பவார் மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். பின்னர் அவர் உரை யாற்றும்போது கூறிய தாவது:

நாட்டில் விவசாயிகளுக்கு இன்னும் நல்ல நாள் வரவில்லை. மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை நினைத்து விவசாயிகள் நடுங்குகின்றனர். ஏனெனில், அது அவர்களின் நிலத்தை வலுக்கட்டாயமாக பிடுங் கிக் கொள்கிறது. இது நல்லத‌ல்ல.

மேலும் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.19,852 கோடியில் இருந்து ரூ. 17 ஆயிரம் கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. இது விவசாயிகளை இன்னும் கொதிப்படையச் செய்துள்ளது.

இதனால் கிழக்கிந்தியப் பகுதி களில் பசுமைப் புரட்சி மற்றும் தேசிய தோட்டக்கலைத் திட்டம் போன்ற திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மத சகிப்புத்தன்மை மற்றும் வேற்றுமைகளை மதிப்பது ஆகியவைதான் இதன் சிறப்பம் சங்கள். ஆகவே இன்று நம் நாட்டைச் செலுத்தி வரும் அடிப் படைவாத சக்திகளை ஒடுக்க வேண்டும். அதனால்தான் பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT