இந்தியா

நரேந்திர மோடி பிரதமரானால் அமைச்சரவையில் இடம்பெறுவாரா அத்வானி?

ஆர்.ஷபிமுன்னா

தேர்தலுக்குப் பிந்தைய பெரும் பாலான கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், புதிய ஆட்சியில் மூத்த தலைவர்களை எப்படி பயன்படுத்துவது என பாஜக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, 86 வயது எல்.கே.அத்வானி, புதிய அமைச்சரவையில் பதவி வகிக்க மாட்டார் எனக் கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அத்வானி என்ன செய்ய விரும்புகிறார் என அவரிடமே கேட்டு முடிவு செய்யும் பொறுப்பு பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி மற்றும் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இருப்பதாகக் கருதப் படுகிறது.

இந்த அமைப்பின் நெருக்கமான தலைவர்களான இருவரும் முதலாவதாக டெல்லியில் கடந்த திங்களன்று சந்தித்துப் பேசினர். பின்னர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான அருண் ஜேட்லியுடனும் ஆலோசனை செய்த கட்கரி, அத்வானியை சந்தித்தார். கட்கரி மட்டும் கடந்த திங்கள்கிழமை மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்காத கட்கரி செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘வாஜ்பாயும் அத் வானியும் எங்களின் மதிப்பு மிக்க மூத்த தலைவர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய நிறுவனர்கள். சரியான முடிவுகளை சரியாக நேரத்தில் எடுக்க பாஜக தவறாது’’ எனக் கூறினார்.

மறுநாள், அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அப்போது, அத்வானிக்கு மிகவும் மதிப்புமிக்க பதவி அளிக்குமாறு கட்கரியிடம் சுஷ்மா கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு இறுதி முடிவு எடுப் பதற்காக இருவரும் ஜேட்லியுடன் அகமதாபாத் சென்று மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து, 'தி இந்து'விடம் பாஜக தேசிய செய்தித் தொடர் பாளர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், ‘‘வாஜ்பாயை போல், அத்வானி எங்களுடைய மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவருக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை முடிவு செய்ய கட்சியில் யாருக்குமே அருகதை கிடையாது. தேர்தல் முடிவுகளைத்தான் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். அடுத்து ஆட்சியை எப்படி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடந்து கொண் டிருப்பது உண்மைதான்’’ என தெரிவித்தார்.

பாஜக தலைவர்களில் முன் னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர் அத்வானி. முன்னாள் துணைப் பிரதமரான இவர், கடந்த தேர்தலில் அவரது கட்சியால் பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப் பட்டார். அவரது தலைமையின்கீழ் ஒரு மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச் சரவையில் உறுப்பினராக சேர்வது அத்வானியை குறைத்து மதிப்பிடுவது போலாகி விடும்.

மேலும், பிரதமர் வேட்பாளராக பாஜக மோடியை முன்னிறுத்தத் தொடங்கியது முதல் முரளி மனோகர் ஜோஷியுடன் அத்வானி யும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை அங்கீகரித்து வெளிப்படையாகவும் பேசினார். எனவே, அவரை எப்படி பயன்படுத் துவது என்ற சர்ச்சை பாஜக தலைவர் களிடையே நீண்ட நாட்களாக நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அத்வானிக்கு குடியரசுத் தலைவர் பதவி மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிய இன்னும் கால அவகாசம் இருப்பதால் அதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. எனவே, அவர் தற்காலிகமாக வகித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் பதவியில் நிரந்தரமாக இருக்கவே விரும்புவார்.

இவருக்கு மாநில தலைவர்களின் நெருக்கமும் இருப்பதால் ஆட்சியை நல்லமுறையில் கொண்டுசெல்ல ஒரு பொருத்தமான ஆலோசகராகவும் அத்வானியின் பலன் மோடிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், அத்வானிக்கு மக்களவைத் தலைவர் பதவி அளிக்க மோடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து'விடம் அத்வானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மோடி தரும் பதவி எதுவானாலும் ஏற்றுக் கொள்ளும்படி அத்வானிக்கு அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். ஏனெனில், அவரது அரசியல் வாரிசாக மகன் ஜெயந்த் அத்வானி தயாராகி வருகிறார்.

இந்த முறை தேர்தலில் அகமதாபாதின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த அவருக்கு, மோடி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்று அவர், காலி செய்யும் வதோதராவின் ஜெயந்த் போட்டியிட குடும்பத்தினர் விரும்புகின்றனர்’’ எனக் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வியாழக்கிழமை மாலை டெல்லி வரத் திட்டமிட்டுள் ளனர். இவர்கள் தேர்தல் முடிவு களுக்குப் பின் பாஜகவுக்கு ஆலோசனை வழங்கப் போவதாக தங்களுக்கு நெருக்கமான வட் டாரங்களிடம் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT