ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கிரிதர் கமாங் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்து, தான் பாஜகவில் சேர உள்ளதாகத் தெரிவித்தார்.
அவரது விருப்பத்தை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதாகவும், எனினும், புவனேஸ்வரத்தில் அவர் முறையாக கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பழங்குடி தலைவரான கிரிதர் கமாங் (72) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
ஒடிசாவின் முன்னாள் முதல்வராக இருந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கு அளித்து, அன்றைய மத்திய அரசு கவிழ காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இவர், கடந்த மே 30-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.