இந்த ஆண்டுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு குவின்ட்டாலுக்கு ரூ.50 உயர்த்தி உள்ளது. இதுபோல பருப்பு வகைகளின் விலையும் ரூ.275 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடை பெற்ற பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சர வைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
2015-16 பயிர் ஆண்டின் காரிப் பருவ வேளாண் விளைபொருட் களின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண் விளைபொருட் களுக்கான செலவு மற்றும் விலை நிர்ணய ஆணை யத்தின் (சிஏசிபி) பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்வதற்கான விலையே எம்எஸ்பி ஆகும். இதன்படி சாதாரண நெல்லுக்கான ஆதார விலை குவின்ட்டாலுக்கு ரூ.1,360-லிருந்து ரூ.1,410 ஆகவும், முதல் தர நெல்லுக்கான விலை ரூ.1,400-லிருந்து ரூ.1,450 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
எம்எஸ்பியைப் பொருத்த வரை சிஏசிபி-யின் பரிந்துரையை அரசு அப்படியே ஏற்றுக்கொள் வது வழக்கம். எனினும், தானிய வகைகளின் கையிருப்பு உபரி யாகவோ, பற்றாக்குறையாகவோ இருக்கும்போது சிஏசிபியின் பரிந்துரையைவிட குவின்ட் டாலுக்கு ரூ.200 குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ நிர்ண யிக்கப்படும்.
எம்எஸ்பி அதிகரிக்கப்பட்டிருப் பதன் மூலம் வேளாண் உற் பத்தியை அதிகரிப்பதில் விவசாயி கள் கவனம் செலுத்துவார்கள். பற்றாக்குறையை சமாளிக்க பருப்பு வகைகளை இறக்குமதி செய்வது என கடந்த வாரம் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் விலைவாசி குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறும் போது, “இந்த ஆண்டுக்கு உளுத்தம் பருப்புக்கான எம்எஸ்பி குவின்ட்டாலுக்கு ரூ.275 அதிகரிக்கப்பட்டு ரூ.4,625 ஆகவும் பாசி பருப்பின் விலை ரூ.250 அதிகரிக்கப்பட்டு ரூ.4,850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.