ஆந்திர மாநிலத்தில் மதுக்கடை களுக்கு புதிய டெண்டர் விடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 4,370 கடை களுக்கு டெண்டர் விடுவதெனவும், ஒருவர் ஒரு கடைக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. எந்த மதத்தின் கடவுள் பெயரையும் மதுக்கடைக்கு வைக்க அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்போது செயல்பட்டு வரும் 50 சதவீத கடை களுக்கு கடவுள் பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளன.