இந்தியா

பெங்களூரு மாநகராட்சிக்கு ஆகஸ்ட் 5-க்குள் தேர்தல் நடத்த வேண்டும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் தமிழ் அமைப்பு களும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

கர்நாடகாவின் 31 மாவட்டங் களில் உள்ள 5,835 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங் களைக் கைப்பற்றியது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், எதிர்க்கட்சியான பாஜக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சிக்கும் உடனடியாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசா ரித்த நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, “வரும்‌ ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீனிவாச்சாரி கூறும் போது, “பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவது தொடர் பாக செவ்வாய்க்கிழமை கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்த உள் ளோம். மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளின் இட ஒதுக்கீடு பட்டியலை தயாரித்து வழங்கு மாறு மாநில அரசிடம் கோரி உள்ளோம். இதன் முடிவுகளைப் பொறுத்து தேர்தல் கால அட்ட வணை அறிவிக்கப்படும்” என்றார்.

தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மாநகராட்சி யைக் கைப்பற்றும் நோக்கத்தில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் தொடர்ந்து நகர் வலம் மேற்கொண்டு வருகிறார். சாலைகளில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டு அவற் றுக்கு தீர்வு காண்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெங்களூருவில் பெரும் பான்மையாக தமிழர்கள் வசிப்ப தால் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும், தமிழ் பிரதிநிதிகளும் தேர்தலில் கள மிறங்குவது தொடர்பாக ஆலோ சித்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு கிழக்கு பகுதியைக் கைப்பற்ற திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி களும், கர்நாடக தமிழ் அமைப்பு களும், தமிழ் நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் திட்டமிட்டுள்ளன.

SCROLL FOR NEXT