இந்தியா

ஆம் ஆத்மி அரசின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உள்துறை செயலர் மீண்டும் நியமனம்

பிடிஐ

டெல்லி உள்துறை செயலர் தரம்பால் என்பவரின் பணிமாற்ற உத்தரவை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சகம் அவரை மீண்டும் உள்துறை செயலராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

யூனியன் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் அம்மாநிலத்துக்கு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உள்துறை மற்றும் நிலம்-கட்டிடங்கள் துறையின் முதன்மை செயலர் பொறுப்பு தரம்பாலிடமே மீண்டும் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தரம்பால் என்பவரை பணிமாற்றம் செய்து விட்டு, அஷ்வனி குமார் என்பவரை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிலம் மற்றும் கட்டிடங்கள் துறை முதன்மைச் செயலராகவும், உள்துறை செயலர் பொறுப்பிற்கு ராஜேந்தர் குமார் என்பவரையும் நியமித்தது.

இதற்கான உத்தரவு எண்கள் 296 மற்றும் 297 ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இதனையடுத்து தரம்பாலிடமே மீண்டும் முதன்மை செயலர் (உள்துறை) மற்றும் நிலம்-கட்டிடங்கள் துறை ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT