கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கணூர் என்ற சிறு நகரில் சர்வதேச எழுத்தாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
கேரள மாநில இளைஞர் நல வாரியம், பம்பா என்கிற கலை, கலாசார அமைப்புடன் இணைந்து அடுத்த மாதம் இலக்கிய திருவிழாவை நடத்து கிறது. ஜூலை 24-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கும் விழாவில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து பம்பா அமைப்பின் நிறுவன உறுப்பினரான கன்னட கவிஞர் கனகா ஹம விஷ்ணுநாத் கூறியதாவது:
சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ளவர்களுக்கு கலை, கலாசார விழாவை வழங்குவதே இதன் நோக்கம். நமது பன்மய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியவை உள்ளன. இலக்கிய விழாக்கள் வாயி லாக அவற்றை காணும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த ஆண்டு விழாவில் வடகிழக்கு பிராந்தியத்தின் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கின்பாம் சிங், நிட்டூ தாஸ், அனுபமா வசுமத்ரி, அனன்யா எஸ்.குஹா, துருவா ஹசாரிகா, மித்ரா புகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து யுவன்சந்திரசேகரன், தமயந்திநீலன், சல்மா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.