அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து 59.22 என்ற நிலையில் உள்ளது.
வாரத்தின் முதல் நாள் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து ரூ.59.22-ஆக இருந்தது.
ஆசிய நாட்டு கரன்சிகளை விட டாலரின் மதிப்பு உயர்ந்து இருப்பதாலும், மாத கடைசி என்பதாலும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகம் இருப்பதாலும் இருந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக துவக்கத்தில், மும்பை சென்செக்ஸ் 91.69 புள்ளிகள் சரிந்து 24,641.20 புள்ளிகளாக இருந்தது.