இந்தியா

மதிய உணவு திட்டத்தில் முட்டைக்கு பதிலாக காய்கறிகளை வழங்கலாம்: மேனகா காந்தி யோசனை

வித்யா வெங்கட்

முட்டைகளின் விலை அதிகமாக இருப்பதால், அதைவிட விலை குறைந்த அளவில் சத்துக்கள் அதிகம் இருக்கும் காய்கறிகளை மதிய உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு அளிக்கலாம் என்று மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைக்கு பதிலாக காய்கறிகளை வழங்கலாம் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு அப்ளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "குழந்தைகளுக்கு 4-ல் இருந்து 6 சதவீதம் வரையிலான புரதச் சத்தே போதுமானது. ஆனால் முட்டையின் சத்துக்கள் குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது என்று அதன் நன்மைகள் மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது.

விலைவாசி அதிகம் இருக்கும் நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளில் அதிக அளவில் சத்துக்கள் இருக்கின்றன" என்றார்.

SCROLL FOR NEXT