உத்தரப் பிரதேசத்தில் குளுக்கோன்-டி, குளுகோஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸில் அதிக அளவு ரசாயன உப்பு இருந்தது முதல்முதலில் உத்தரப் பிரதேசத்தில்தான் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அங்கு மேலும் ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் பகுதியைச் சேர்ந்த பப்லு என்பவர் இருநாட்களுக்கு முன்பு குளுக்கோன்-டி பாக்கெட் ஒன்றை வாங்கினார். நேற்று அவர் தனது குடும்பத்துடன் குளுக்கோன்-டியை உட்கொண்டார். சிறிது நேரத்திலேயே அதனை உட்கொண்ட அவர்கள் அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து குளுகோன்-டி பாக்கெட்டை சோதித்தபோது அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குளூகோன்-டி பாக்கெட் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்காவின் பென்சுல்வேனியாவை தலைமையிடமாகக் கொண்ட எச்.ஜே.ஹீன்ஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், குளுகோன்-டியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.