இந்தியா

ஆக. 16-க்குள் ஏஐபிஎம்டி மறு தேர்வை நடத்த சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் ரத்து செய்யப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைத்தேர்வுக்கு பதிலாக மறுதேர்வை நடத்தி முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பு கடந்த மே 3-ம் தேதி இத்தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக மறுநாளே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், முறைகேடு தொடர்பாக ஹரியாணா மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 15-ம் தேதியன்று, "தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும்" என சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துவது மிகவும் சிரமம், எனவே மறு தேர்வு நடத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது அவகாசம் தேவை எனக் கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், ஏ.எம்.சாப்ரே அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் ரத்து செய்யப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைத்தேர்வுக்கு பதிலாக மறுதேர்வை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்" என சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT