இந்தியாவில் இந்த ஆண்டு பருவ மழை சராசரியாக இருக்கும் என்று ‘ஸ்கைமெட்’ என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழைக் காலம் ஆகும். இந்த பருவத்தின்போதே நாட்டில் 75 சதவீத மழை பெய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மழை முக்கிய ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 12 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு, நீண்டகால சராசரி அளவில் 93 சதவீத பருவமழை பெய்யும், இதில் 5 சதவீதம் வரை முரண் இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்று ‘ஸ்கைமெட்’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.