இந்தியா

யோகா வகுப்புகள் நடத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆந்திரப் பிரதேசத்தில் யோகா வகுப்புகளை நடத்த மாநில அரசு ரூ. 25 கோடி வழங்கும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நேற்று நடந்த யோகா முகாமில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: யோகா வகுப்புகளை நடத்துவதற் காக ஆயுஷ் துறைக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யும்.

யோகாவுக்கு அங்கீகாரம் தேடித் தந்த பிரதமர் மோடி பாராட்டப்பட வேண்டியவர். யோகாவின் மகத்து வத்தை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்துள்ளது. யோகா, கூட்டுக்குடும்ப முறை ஆகியவை இந்திய பாரம்பரியத்தின் அடை யாளம். இவை பதற்றத்தை தணித்து உடல்நலத்தை மேம்படுத்துபவை. மாணவர்கள் அன்றாடம் யோகா பயிற்சிமேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

SCROLL FOR NEXT