இந்தியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரிப்பு

பிடிஐ

பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரிக்கப்பட்டது. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.35 குறைக்கப்பட்டது.

இந்த விலை மாற்றங்கள் திங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மே மாதம் முதல் இது 3-வது பெட்ரோல் விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.29-லிருந்து ரூ.66.93 ஆக உயர்கிறது. ஆனால் டீசல் விலை ரூ.1.35 குறைக்கப்பட்டதால் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50.93ஆக இருக்கும்.

மே மாதம் 16-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.71-ம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பிறகு சர்வதேச பெட்ரோல் விலைகள் அதிகரித்தும், டீசல் விலைகள் குறைந்தும் வந்தன, இதனையடுத்தே பெட்ரோல் விலை சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT