ஒடிஸா மாநிலத்தில் நேற்று விமானப்படையின் பயிற்சி போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளா னது. இதில் 2 விமானிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
தினசரி நடவடிக்கையாக கலைக்குந்தா படைத் தளத்தில் இருந்து 50 கிமீ தூரம் பயணித்த இந்த விமானம் குதார்சஹி பகுதி வயல் வெளியில் விழுந்தது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து நிகழ்வதற்கு முன்பே இந்த விமானத்தைச் செலுத்திய விமானிகள் இருவரும் வெளியே குதித்துவிட்டனர். எனினும், அவர் களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அந்த இரண்டு விமானிகளில் ஒருவர் சச்சின் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான வுடன், ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து கலைக்குந்தாவில் இருந்து விமானப்படை மீட்பு ஹெலிகாப்டர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது.