இந்தியா

பெங்களூருவில் விதிகளை மீறி சாலையை கடந்த 130 பேர் கைது

வீ.கோவிந்தராஜ்

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறி சாலையைக் கடந்த 130 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெங்களூருவில் சாலை விபத்து களை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொது மக்களிடம் போக்குவரத்து போலீ ஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பெங்க ளூரு எலக்ட்ரானிக் சிட்டி - ஒசூர் நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பகுதியில் சாலையைக் கடந்த 28 பேரை கைது செய்த‌னர். இதேபோல் வீர‌சந்திரா -அனந்த‌புரா இடையிலான 6 கி.மீ. சாலையில் தடுப்புகளை தாண்டியும் குனிந்தும் கடந்த 8 பேர் கைது செய்யப்பட்ட னர். பெங்களூரு முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை நடை பெற்ற சோதனையில் மொத்தம் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் சலிம் கூறும்போது, “3 ஆண்டுகளுக்கு பிறகு விதிகளை மீறும் பாதசாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் பெங்களூருவில் 130 பாதசாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 90 சதவீதம் பேர் அபராதம் செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனர்” என்றார்.

SCROLL FOR NEXT