இந்தியா

நாகா தீவிரவாதிகளுக்கு உதவவில்லை: சீன வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

பிடிஐ

வடகிழக்கு மாநிலங்களில் உல்பா, நாகா தீவிரவாதிகள் உட்பட பல்வேறு தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு சீனா ஆதரவளிப்பதாக தொடர்ந்து இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதற்கேற்ப உல்பா இயக்க கமாண்டர் பரேஷ் பரூவா சீனாவில் தஞ்சம் அடைந்துள்ளார். குறிப்பாக மணிப்பூர், அருணாச்சல பிரதேசத் தில் தீவிரவாத தாக்குதல்களை சீனா தூண்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனாவின் வெளி யுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ நேற்று கூறியதாவது:

மணிப்பூரில் இந்திய வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சீனாதான் காரணம் என்று கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது. இதுதொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நாட்டிலும் அரசுக்கு எதிராக செயல்படும் எந்த அமைப்புக்கும் சீனா உதவி செய்வதில்லை.

இவ்வாறு ஹாங் லீ கூறினார்.

ஷாங்காய் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நிறுவனத் தின் ஆசிய பசிபிக் ஸ்டடீஸ் துறை இயக்குநர் ஜோவ் கான்செங் கூறு கையில், ‘‘வடகிழக்கு மாநிலங்க ளில் உள்ள தீவிரவாதிகளுக்கு சீனா உதவி செய்து வருகிறது என்ற இந்திய ஊடகங்கள் பல ஆண்டு களாக தொடர்ந்து வதந்தி கிளப்பி வருகின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT