நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக கூட்டணி அரசு பலவீனப் படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று புவனேஸ்வரத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே நாடாளுமன்ற ஜன நாயக நடைமுறைகளை பலவீனப் படுத்தி வருகிறது. அனைத்து அதிகாரங்களும் பிரதமரிடம் குவிந்துள்ளது. இது ஆபத்தானது.
இந்தியாவில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இல்லை என்பதை பாஜக நினை வில் கொள்ள வேண்டும். ஏழை விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளாமல், தொழில் நிறுவனங் களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. சங் பரிவார அமைப்புகளின் கட்டளைப்படி அரசு செயல்படுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் கரமாக பாஜக மாறிவிட் டது போல் தோன்றுகிறது. இதனால் நாட்டின் சமூக மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியலைப்பு சட்டத்துக்கும் சவால் எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவது மிகவும் அவசியம். இவ்வாறு டி.ராஜா கூறினார்.