இந்தியா

ராஜபாதை நிகழ்ச்சியில் பிரதமர் யோகா செய்யமாட்டார்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

பிடிஐ

‘சர்வதேச யோகா தின'த்தன்று (ஜூன் 21) டெல்லியில் ராஜபாதை பகுதியில் அந்நாளைச் சிறப் பிக்கும் விதமாக பல யோகா கலைஞர்கள் இணைந்து யோகா செய்ய இருக்கின்றனர். அந்நிகழ்ச் சியில் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்யமாட்டார் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை யொட்டி மேற்கொள்ளப்பட் டிருக்கிற ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடையே சுஷ்மா கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தன்று அந்நாளைச் சிறப்பிக்கும் விதமாக ராஜபாதையில் சுமார் 35 ஆயிரம் பேர் யோகா செய்கின்றனர். அந்நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று சிறப்பிப்பார். ஆனால் அவர் யோகா செய்யமாட்டார்.

இன்று உலகம் வன்முறையால் சூழப்பட்டுள்ளது. அதிலிருந்து அமைதியை நோக்கிச் செல்ல யோகா உதவும். யோகா இந்தியாவின் மென்மையான சக்தியாகும். இந்த 'மென் சக்தி' மூலம் உலகில் வன்முறையைக் குறைத்து அமைதியை நிலை நாட்ட முடியும் என்றார்.

SCROLL FOR NEXT