இந்தியா

அமித் ஷா என்னை சந்திக்க மறுத்ததாக கூறுவது தவறானது: வசுந்தரா ராஜே விளக்கம்

பிடிஐ

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் வெளியான தகவலை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மறுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலக ஊடகத் துறை ஆலோசகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கு மாறு வசுந்தரா ராஜே கேட்ட தாகவும், அவர் அதை மறுத்து விட்டதாகவும் சில சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தவறான தகவல் ஆகும்.

அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் கேட்கவும் இல்லை, அதை அவர் மறுக்கவும் இல்லை. மேலும் முதல்வருக்கு ஆதரவாக 30 பாஜக எம்எல்ஏக்கள் டெல்லிக்கு சென்றதாக வெளியான தகவலிலும் உண்மை இல்லை. செய்திகளை பிரசுரிக்கும்போது அல்லது வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மையை ஊட கங்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஊழல் புகாரில் சிக்கி யதையடுத்து, பிரிட்டனில் தங்க வசுந்தரா உதவியதாக தகவல் வெளி யானது. இதையடுத்து, வசுந்தரா ராஜே அமித் ஷாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT