டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வந்த, அம்மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் நேற்று முன் தினம் (செவ்வாய்) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி சட்ட அமைச்சரைத் தொடர்ந்து, போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி கன்டோன்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரேந்தர் சிங் சிக்கிம் சிக்கியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.