இந்தியா

டெல்லியில் ரூ.100 கோடி செலவில் 5 ஆயிரம் பேருந்துகளில் கேமரா: ஆம் ஆத்மி கட்சி அரசு முடிவு

பிடிஐ

டெல்லி பேருந்துகளில் பயணி களின் பாதுகாப்பை குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 5 ஆயிரம் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அர்விந்த் கேஜ்ரிவால் தலை மையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் தற்போது டெல்லி போக்குவரத்து கழகம் சார்பில் 4700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர டெல்லி ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் சார்பில் 1300 ஆரஞ்சு நிற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இவ்விரு வகையிலும் சேர்ந்த 5,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் கோபால் ராய் கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “1,300 ஆரஞ்சு நிற பேருந்துகள் மற்றும் டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் அனைத்து தாழ்தள பேருந்து களிலும் இந்த கேமராக்கள் பொருத்தப்படும்.

அனைத்து பயணிகளையும் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள் இருக்கும்” என்றார்.

டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கண்காணிப்பு கேமரா திட்டத்துக்காக மாநில அரசு வரும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கவுள்ளது.

இதுதவிர பயிற்சி பெற்ற 5 ஆயிரம் மார்ஷல் வீரர்கள் அனைத்து பேருந்துகளிலும் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஈவ் டீசிங் மற்றும் பெண் களுக்கு எதிராக வன்முறைகள் தடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT