மணிப்பூர் தலைநகரில் ஆளுநர் இல்லம் அருகே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை ஆளுநர் இல்லம் அருகே பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பில் யாரும் பலியானதாக இதுவரையில் தெரியவில்லை என்று ஏ.என்.ஐ. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சமீப காலமாக வடகிழக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ராணுவ அணிவகுப்பின்போது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லபட்டது நினைவுகூரத்தக்கது.