இந்தியா

கேஜ்ரிவால், ஹசாரே மீதான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

பிடிஐ

கடந்த 2011ம் ஆண்டு, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் போராடியபோது, அதில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தியதற்காக, ஹசாரே மற்றும் கேஜ்ரிவால் மீது சத்வீர் சிங் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அவர், மேல்முறையீடு செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், `விசாரணை நீதிமன்றம் 2011ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மனுதாரரோ 2015ம் ஆண்டில்தான் மேல் முறையீடு செய்துள்ளார். தாமதமாக மேல்முறையீடு செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்களும் ஏற்கத்தக்கதல்ல' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT