இந்தியா

ரூ.1,500 கோடியில் அணு உலை விபத்து காப்பீடு நிதியம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதை நிறுவிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் வழக்கு தொடுக்க அணு உலை விபத்து இழப்பு பொறுப்பேற்பு சட்டம் (சிஎல்என்டி) வகை செய்கிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க தயக்கம் காட்டி வந்தன. இது அணுசக்தித் துறைக்கு மிக முக்கிய தடையாக இருந்து வந்தது. இதையடுத்து, இந்தியா சார்பில் அணு உலை காப்பீட்டு நிதியத்தை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ரூ.1,500 கோடியில் காப்பீடு நிதியம் தொடங்கப் பட்டுள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அறிவித்தார்.

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் (ஜிஐசி) உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இணைந்து ரூ.1,500 கோடிக்கான காப்பீடு நிதியத்தை ஏற்படுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT