இந்தியா

வாரணாசியில் குண்டுவெடிப்பு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம், வாரணாசி குடியிருப்பு பகுதியின் குப்பைமேட்டில் திங்களன்று வெடிகுண்டு வெடித்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:

குப்பைமேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. சம்பவ பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தன.

புண்ணியத்தலமான வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT