கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் படைப்புகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர் களுக்காக செல்போன் ‘ஆப்’ வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே 9-ம் தேதி தாகூரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் படைப்புகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயலியாக (ஆப்) அறிமுகம் செய்யப்பட் டுள்ளன. இந்த செயலி http://www.nltr.org/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு அங்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள தாகூரின் அனைத்துப் படைப்புகளையும் காணும் வசதியைத் தருகிறது.
இதை அறிமுகம் செய்துள்ள இயல்புமொழி தொழில்நுட்ப ஆய்வு சங்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதன்மூலம் அதிக மக்கள் தாகூரின் படைப்புகளை வாசிக்க முடியும். இளைய தலை முறையினர் தாகூர் மற்றும் அவரின் படைப்புகள் பற்றி அறிந்துகொள்ள இந்த செயலி உதவியாக இருக்கும்” என்றார்.