இந்தியா

பிஹாரில் பள்ளி இயக்குநர் கொலை: அதிகாரி பணியிடை நீக்கம்

பிடிஐ

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத் தில் டிபிஎஸ் பள்ளியில் படித்து வந்த 2 மாணவர்களின் சடலம் ஒரு குட்டையிலிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோரும் அப்பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளி இயக்குநர் தேவேந்திர பிரசாத் மீதும் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் இறந்தார். இந்த சம்பவம் போலீஸார் கண் முன்பே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பிரசாத் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் பதி வாகி இருந்தது. அதில் பொதுமக்கள் கம்புகளாலும், காலால் எட்டி உதைத் தும் தாக்குதல் நடத்துவதும், இதில் அவர் நிலைகுலைந்து கிடப்பதும் பதிவாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. நாளந்தா காவல் நிலைய பொறுப்பாளர் சுனில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT