இஸ்ரோவின் மிகப் பெரிய விண் வெளி மையமாக கருதப்படும் திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக தமிழக விஞ்ஞானி சிவன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தமிழர் ஒருவர் இந்த பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறை.
இஸ்ரோவின் முதல் மூன்று பெரிய விண்வெளி மையங்க ளாக முறையே திருவனந்தபுரத் தில் இருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூரு ஐசாக், ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி மையம் ஆகியவை உள்ளன.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணி யாற்றிய எம்.சி.தத்தன் (64), சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த எம்.ஓ.எஸ். பிரசாத் (62) ஆகியோர் கடந்த மே மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றனர்.
இதையடுத்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் புதிய இயக்குநராக தமிழக விஞ்ஞானி சிவன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு மகேந்திரகிரியில் இருக்கும் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
கடந்த 1980-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறு வனத்தில் ஏரோனாடிக்கல் இன்ஜினீயரிங் முடித்த அவர் பெங்களூர் ஐஐஎஸ்சி-ல் அதே துறையில் எம்.இ. பட்டம் பெற்றார். பின்னர் 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.
கடந்த 1982-ம் ஆண்டு இஸ்ரோ வின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு பணியில் சிவன் இணைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக் கெட்டின் திட்ட இயக்குநராக பணி யாற்றியுள்ளார்.