தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர் நீதி மன்றம் வியாழக்கிழமை தெரி வித்தது.
இதனிடையே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகாததால் இறுதி வாதம் நடைபெறவில்லை. முதல் வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலை யில் வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராக வில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்புடைய மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதால் அரசு வழக்கறிஞர் அங்கு சென்றிருப்பதாக நீதிபதி டி'குன்ஹாவிடம் தெரிவிக்கப் பட்டது. உயர் நீதிமன்ற விசார ணையை பவானி சிங் முடித்து விட்டு வந்த பிறகு தன்னுடைய இறுதிவாதத்தை தொடர வேண் டும் என நீதிபதி டி'குன்ஹா தெரி வித்தார்.
7 புதிய மனுக்கள்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப் பட்டுள்ள ரிவர்வே அக்ரோ ஃபார்ம், மெடோ அக்ரோ ஃபார்ம் உள்ளிட்ட 7 தனியார் நிறுவனங்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட 7 மனுக்கள் நீதிபதி நாராயணசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
‘தங்களுடைய நிறுவனங் களையும் அதன் சொத்துகளையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதே நேரத்தில் இவ்வழக்கில் மேலும் சிலரை சாட்சிகளாக சேர்க்க வேண்டும்' என அந்த மனுக்க ளில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நாராயண சாமி, தனியார் நிறுவனங்களின் மனுக்களுக்கு வருகிற 20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு உத்தரவிட்டார்.
தடைவிதிக்க மறுப்பு
இதனைத் தொடர்ந்து ஜெய லலிதா, சசிகலா, இளவரசி ஆகி யோர் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சொத் துக்குவிப்பு வழக்கில் இணைக்கப் பட்டுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
அந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த பிறகே அரசு வழக்க றிஞர் பவானி சிங் தன்னுடைய இறுதி வாதத்தை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் உத்திரவிட்டுள் ளார். அவரது தீர்ப்பின்படி, தனியார் நிறுவனங்களின் மனுக் கள் மீதான விசாரணையை முதலில் முடிக்க வேண்டும். அது வரை சொத்துக்குவிப்பு வழக்கில் நடைபெற்றுவரும் அரசு வழக்கறிஞரின் இறுதி வாதத் திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரப் பட்டிருந்தது.
ஜெயலலிதா தரப்பின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நாராயணசாமி, ‘‘பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.வழக்கு தொடர்பான பல்வேறு விஷ யங்களை மறைத்தும் தவ றான தகவல்களை மனுதாரர் கூறி யுள்ளதாகவும் நீதிபதி டி'குன்ஹா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
எனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது'' என தெரிவித்தார். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசார ணையை வருகிற 20-ம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.
பவானி சிங் வரவில்லை
இந்நிலையில் வியாழக்கிழமை இறுதிவாதம் செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங் கர் நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் மீதான விசாரணை இருந் ததால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு வரவில்லை. மாலை 4 மணி வரை நீதிபதி டி'குன்ஹா காத்திருந்தும் அவர் வரா ததால் சொத்துக்குவிப்பு வழக் கின் இறுதிவிசாரணையை வெள் ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொதுச்செயலாளர் அன்பழ கன் தரப்பும் தங்களுடைய இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய் வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அன்பழகனின் வழக்கறி ஞர்கள் குமரேசன், சரவணன், ராமசாமி, பாலாஜி சிங், நடேசன் அடங்கிய 5 பேர் குழு சுமார் 500 பக்க அளவிலான இறுதிவாதத்தை தயாரித்திருப்பதாகக் கூறப் படுகிறது.